search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்தநாள் கொண்டாட்டம்"

    • வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது பிறந்த நாளன்று கேக்கிற்கு பதிலாக ராட்சத பப்பாளியை வெட்டி கொண்டாடிய காட்சிகள் உள்ளது.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்களது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பிறந்த நாளன்று கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகி வருகிறது.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது பிறந்த நாளன்று கேக்கிற்கு பதிலாக ராட்சத பப்பாளியை வெட்டி கொண்டாடிய காட்சிகள் உள்ளது.

    இன்ஸ்டாகிராமில் டாக்டர் கவிதா ரேனிகுன்ட்லா என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் பேனர்கள், பலூன்கள் மற்றும் அலங்கார பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு இடத்தில் வாலிபர் மற்றும் அவருடன் சிலர் நிற்கிறார்கள். அப்போது வாலிபர் ஒருவர் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ராட்சத பப்பாளியை வெட்டி தன்னுடன் இருப்பவர்களுக்கு வழங்குகிறார்.

    அப்போது பின்னணியில் 'ஹேப்பி பெர்த்டே' என்ற டியூன் ஒலிக்கிறது. வழக்கத்திற்கு மாறான இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் அவரது வித்தியாசமான செயலை பாராட்டினர்.



    • எருது விடும் விழாவில் பல பரிசுகளை வென்றுள்ளது
    • 3 மாடுகளையும் அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சாலப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அழகுராஜா, அழகு ராணி, ஓம் சக்தி, என்ற பெயரில் 3 மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த மாடுகள் வேலூர், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் எருது விடும் திருவிழாவில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளது.

    இதில் பெருமாள் வளர்த்து வரும் அழகு ராணி என்ற மாட்டிற்கு 3-ம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடினர்.

    இதனையொட்டி பெருமாள் 3 மாடுகளையும் அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்து ஊர் நடுவே கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

    பின்னர் மாடுகளுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாட்டின் உரிமையாளர்களுக்கும், மாடுகளுக்கும் சால்வை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • சாய்ரகு இந்து எழுச்சி பேரவையில் தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ளார்.
    • ஆட்டம் பாட்டத்துடன் சாய்ரகு பட்டா கத்தியால் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சாய்ரகு (வயது 39). இவர் இந்து எழுச்சி பேரவையில் தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று தனது பிறந்தநாளை தஞ்சை-நாகை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கொண்டாடினார்.

    அப்போது ஆட்டம் பாட்டத்துடன் சாய்ரகு பட்டா கத்தியால் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். இந்த நிலையில் இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாய்ரகுவை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விழாவையொட்டி கட்சி நிர்வாகிகள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமைந்துள்ள அம்பேத்கரின்உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் 61-வது பிறந்தநாள் விழா தருமபுரியில் கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு மத்திய மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் எம்.எஸ்.ராமன், கப்பல் செந்தில்குமார், சிவஞானம், கிள்ளிவளவன், பரோடா வங்கி பெருமாள், திருமாறன், மாரவாடி செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவையொட்டி கட்சி நிர்வாகிகள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமைந்துள்ள அம்பேத்கரின்உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதனையடுத்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    விழாவில் முத்துக்குமார் ஆதித்தமிழர், மன்னன், தமிழ்வளவன், தனம், விடு தலைமதி, ஆட்டோ கிருஷ்ணன், சங்கர், அம்பேத் வளவன், ஜெகநாதன், நெல்லை சீணி, ஆறுமுகபாண்டி, தென்பாண்டியன், மூர்த்தி, செல்லதுரை, கார்த்திக், நல்லதம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் திடீரென, அந்த மாணவியின் கன்னத்தில் கேக்கை தடவினார்கள்.

    கோவை:

    கொண்டாட்டம்....குத்தாட்டம்....குதூகலம் என்பது இருக்கட்டும்... ஆனால் அதில் எல்லை மீறும்போது தொல்லை தானே. என்னதான் நண்பர்கள், சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்தினாலும், கவனமாக இருக்க வேண்டும் அல்லவா...? உற்சாக மிகுதியால் உணர்ச்சி வசப்பட்டு விட்டால் பிரச்சினை தானே. அது பற்றி பார்க்கலாம்:-

    கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ளபழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேர் திடீரென, அந்த மாணவியின் கன்னத்தில் கேக்கை தடவினார்கள். இதனை மாணவி தடுத்தார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டாள்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து மாணவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடுரோட்டில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அதே பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (வயது 21), சஞ்சீவி (19). சந்தோஷ் (20), 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்க முயற்சி உட்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • நண்பர்கள் காசு வசூல் செய்து கேக் ஆர்டர் செய்து இருக்கிறார்கள்.
    • அந்தி மயங்கி இருள் சூழ்ந்ததும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தயாரானார்கள்.

    என்னத்த சொல்ல... என்று வடிவேலு பாணியில் தலையில் அடித்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.

    பிறந்த நாள் என்றால் புதிய ஆடை அணிவார்கள். கோவில்களுக்கு செல்வார்கள். சிலர் நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டுவார்கள். மெழுகுவர்த்தி ஏற்றி 'ஹேப்பி பர்த் டே' பாடுவார்கள். உற்சாகத்தில் கேக்கை எடுத்து முகத்தில் பூசுவார்கள். வாசனை நுரையை பீய்ச்சி அடித்தும் மகிழ்வார்கள்.

    எங்காவது யாராவது உடலெல்லாம் சாணத்தை பூசியும், முட்டையை வீசியும் கொண்டாடுவதை கேள்விபட்டிருக்கிறோமா? இப்படியும் கொண்டாடுபவர்களை என்ன சொல்வது? கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு, அருகே உள்ள செட்டிவிளை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் தங்களில் யாருக்காவது பிறந்த நாள் என்றால் பொது வெளியில் இப்படித் தான் கொண்டாடுவார்களாம்.

    நேற்று கல்லூரி மாணவர் ஒருவருக்கு பிறந்த நாள். நண்பர்கள் காசு வசூல் செய்து கேக் ஆர்டர் செய்து இருக்கிறார்கள். அந்தி மயங்கி இருள் சூழ்ந்ததும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தயாரானார்கள். கேக் வந்தது, ரோட்டோரமாக தெருவிளக்கு வெளிச்சத்தில் ஒரு ஸ்டூலை போட்டு அதில் கேக்கை வைத்து மெழுகுவர்த்திகளையும் ஏற்றினார்கள்.

    மாப்பிளே... கேக்கை வெட்டுடா என்றதும் அவரும் மகிழ்ச்சியுடன் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு கேக்கை வெட்டினார்.

    அவ்வளவுதான்... சுற்றி நின்ற நண்பர்கள் சரமாரியாக முட்டைகளை எடுத்து வீசினார்கள். உடல் முழுவதும் முட்டை கருக்கள் வடிந்தது.

    சிலர் முட்டையை எடுத்து அவரது முகத்திலும் தேய்த்துவிட தவறவில்லை.

    அதோடு விடவில்லை. பக்கெட்டுகளில் தயாராக கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை எடுத்து தலையில் ஊற்றி சாணத்தில் குளிக்க வைத்தார்கள்.

    சிலர் சாணத்தை எடுத்து வீசினார்கள். இன்னும் சிலர் சாணத்தை முகத்திலும் பூசினார்கள்.

    பிறந்த நாள் கொண்டாடிய அந்த மாணவரின் உடல் எப்படி இருந்து இருக்கும் என்று சொல்ல தேவையில்லை.

    ஒரு படத்தில் வடிவேல் மீது மறைந்து இருந்து காய்களை வீசி கலாய்ப்பார்கள். அப்போது அங்கு அரிவாளுடன் வந்தவரை தனக்கு கேடயமாக்கி என் தலைவர் வந்துட்டாருல்ல... இனி வீசி பாருங்கடா என்றதும் மறைந்திருந்து சாணத்தை முகத்தில் அடிப்பார்கள். அதை முகர்ந்து பார்த்த வடிவேல் சீ.. கர்மம்... கர்மம் என்பார். கிட்டத்தட்ட அதே பாணியில்தான் அந்த வாலிபரும் அவ்வப்போது தனது முகத்தில் வந்து விழுந்த சாணத்தையும் முட்டையையும் துடைத்தபடி நாற்றத்தால் முகத்தை சுளித்துக் கொண்டார்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஒரு அளவே இல்லையாப்பா என்று சொல்லி சென்றார்கள்.

    'தேய்கின்றது பொன்மாலை நிலா... தேயாதது நம் ஆசை நிலா... இது வானம் போலே வாழும் பாசம்' என்ற பாடலை வேறு பாடிக்கொண்டு ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து ஆட்டமும் போட்டுக் கொண்டார்கள். இதை செல்லில் பதிவு செய்த யாரோ ஒருவர் இணையத்தில் பதிவேற்றி உள்ளார். அது வைரலாகி வருகின்றது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்களை வழங்கிய சேர்மன்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி யில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

    இந்நிகழ்ச்சியில், நெமிலி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் கேக் வெட்டி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், நெமிலி பேரூர்கழக செயலாளர்.ஜனார்த்தனன், சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர்.பவானி வடிவேலு, நெமிலி பேரூராட்சி மன்றத் தலைவர்.ரேணுகாதேவி சரவணன், பொதுக்குழு உறுப்பினர் திரு.அப்துல் நசீர், ஒன்றிய கழக நிர்வாகிகள் புருஷோத்தமன், பாண்டியன், சங்கர், ஜெயச்சந்திரன், ஹரிகிருஷ்ணன், பெருமாள், நெமிலி பேரூர் கழக நிர்வாகிகள் கார்த்திகேயன், சுகுமார், சேகர், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைவரும் வந்ததும் பிறந்த நாள் கொண்டாடும் பூனை மேடைக்கு அழைத்து வரப்பட்டது.
    • பூனைக்கு பிறந்த நாள் பரிசுகளை வழங்கும் விருந்தினர்கள் பூனையுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    மும்பையில் திருமண நாளை மறந்து போன கணவரை சரமாரியாக அடித்து உதைத்த மனைவி பற்றிய தகவல் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வரும் நிலையில், செல்ல பூனைக்கு பிறந்த நாள் கொண்டாடிய பெண்கள் பற்றிய தகவலும் இப்போது சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.

    பூனைக்கு பிறந்த நாள் கொண்டாட பெண்கள் வீட்டை அலங்கரித்து பலூன்கள் கட்டி, உறவினர்களை விருந்துக்கு அழைத்து உள்ளனர்.

    அனைவரும் வந்ததும் பிறந்த நாள் கொண்டாடும் பூனை மேடைக்கு அழைத்து வரப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த கேக் வெட்டி பூனைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.

    அதன்பின்பு விருந்து நிகழ்ச்சி களைகட்டுகிறது. பூனைக்கு பிறந்த நாள் பரிசுகளை வழங்கும் விருந்தினர்கள் பூனையுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டனர். இவை அனைத்தையும் பெண்கள் குழுவினர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளனர். இப்போது இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

    • உற்சாக மிகுதியில் கேக்குகளை ஒருவர் மீது ஒருவர் வீசியும், நுரைவரும் ஸ்பிரேயை மற்றவர்கள் மீது அடித்தும் கூச்சலிட்டனர்.
    • மாணவிகளின் இந்த செயல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்களில் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி செல்லும் காலை மற்றும் மாலை நேரத்திலும் கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவள்ளூரில் நடுரோட்டில் மாணவிகள் 'கேக்' வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் காமரா ஜர் சிலை அருகே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு கடையில் கேக் ஒன்றை வாங்கினர். பின்னர் அவர்கள் தங்களது தோழி ஒருவரது பிறந்தநாளை நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினர்.

    அப்போது உற்சாக மிகுதியில் கேக்குகளை ஒருவர் மீது ஒருவர் வீசியும், நுரைவரும் ஸ்பிரேயை மற்றவர்கள் மீது அடித்தும் கூச்சலிட்டனர். அந்த நுரை சாலையில் சென்ற பொதுமக்கள் மீது விழுந்தது. இதனை பொதுமக்கள் கண்டித்தும் மாணவிகள் கண்டுகொள்ளாமல் கத்தியபடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் இந்த செயல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் அந்த மாணவிகளின் விபரத்தை சேகரித்து அவர்களுக்கு அறிவுரை கூற போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • பிறந்தநாள் கொண்டாட்டத்திலிருந்த சிறுமியின் நண்பர்கள் 5 பேர் போதைபொருளை அதிக அளவில் சாப்பிட்டு போதையில் இருந்தனர்.
    • சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய அவரது தோழி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சந்திராண குட்டா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பிறந்தநாளை ஆண் நண்பர்களுடன் கடந்த 4-ந் தேதி கொண்டாடினார். அப்போது அவரது காதலனும் உடன் இருந்தார்.

    பிறந்தநாள் கொண்டாட்டத்திலிருந்த சிறுமியின் நண்பர்கள் 5 பேர் போதைபொருளை அதிக அளவில் சாப்பிட்டு போதையில் இருந்தனர்.

    மேலும் அவர்கள் சிறுமியிடம் தங்களுக்கு உனது தோழி யாரையாவது இங்கே அழைத்து வர முடியுமா எனக் கேட்டுள்ளனர். அதன்படி சிறுமி வெளியே சென்றார்.

    அப்போது அவரது நெருங்கிய தோழியான 16 வயது சிறுமி அவரது தாயாருக்கு மருந்து வாங்குவதற்காக அருகில் உள்ள மருந்து கடைக்கு வந்திருந்தார்.

    அவரிடம் சிறுமி நைசாக பேச்சு கொடுத்தார். எனது பிறந்தநாள் விழா நடக்கிறது. உடனே வர வேண்டும் என கட்டாயப்படுத்தி அழைத்தார். இதனை அடுத்து அவர்கள் கண்டிக்கல் கேட் பகுதியில் உள்ள பிறந்தநாள் கொண்டாடிய வீட்டிற்கு சென்றனர்.

    அங்கு சென்றதும் தோழியை ஆண் நண்பர்கள் இருந்த அறையில் தள்ளி விட்டு விட்டு பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி தனது காதலனுடன் மற்றொரு அறைக்கு சென்று விட்டார்.

    அங்கு போதையின் உச்சத்தில் இருந்த 5 வாலிபர்களும் சேர்ந்து அறையில் தள்ளி விடப்பட்ட 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றினர். சிறுமி மயக்க நிலையில் இருந்தபோது 5 பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். சிறுமி கூச்சலிட்டால் வெளியே சத்தம் கேட்கக்கூடாது என்பதற்காக தங்களது அறையில் இருந்த ஒலிபெருக்கியில் சத்தமாக சினிமா பாடல் ஒலிபரப்பினர்.

    சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேரும் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர்.

    அதிகாலை 3 மணிக்கு சிறுமிக்கு மயக்கம் தெளிந்தது. பின்னர் அவர் வீட்டிற்கு சென்று நடந்த கொடுமைகள் குறித்து தனது தாயாரிடம் கூறினார். இது குறித்து சந்திரநாக போலீசில் புகார் செய்தார். போலீசார் நடந்த சம்பவம் குறித்து சிறுமியிடம் தகவல்களை கேட்டறிந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தோழி மற்றும் பலாத்காரம் செய்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    கைதான வாலிபர்கள் 5 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய அவரது தோழி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×